உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது பற்றி சீனா வேண்டுகோள்
2024-02-13 16:41:28

அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெடுக்கடியைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வ சூழ்நிலையை உருவாக்கும் வகையில், தொடர்புடைய தரப்புகள் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதை சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜூன் பிப்ரவரி 12ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று உக்ரைன் பிரச்சினை பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் பரிசீலனைக் கூட்டத்தில் அவர் கூறுகையில், தொடர்புடைய தரப்புகள் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளித்து, தொடர்பை வலுப்படுத்தி, பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி, பொது கருத்தை வலுப்படுத்தி, போர் நிறுத்தத்தை விரைவில் நனவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சர்வதேச அமைதியைப் பேணிகாக்கும் உறுதியான ஆற்றலாக சீனா விளங்குகிறது. அமைதி மற்றும் நீதியில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அரசியல் வழிமுறை மூலம் உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட சூடான பிரச்சினைக்களைத் தீர்ப்பதை முன்னேற்றி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிகாப்பதற்கு சளைக்காத முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.