ரஃபா பிரதேசத்தின் சூழ்நிலை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-02-13 16:45:37

காசாவின் தென் பகுதியிலுள்ள ரஃபா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் பெருமளவில் வான் தாக்குதல் தொடுப்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 13ஆம் நாள் கூறுகையில், ரஃபா பிரதேசத்திலுள்ள சூழ்நிலையில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அப்பாவி மக்களைப் புண்படுத்தி, சர்வதேச சட்டத்துக்கு மீறிய செயல்களுக்கு சீனா எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை வெகுவிரைவில் நிறுத்தி, அப்பாவி மக்களின் உயிரிழப்பை முழுமூச்சுடன் தவிர்த்து, ரஃபா பிரதேசத்தில் கடுமையான மனித நேய பேரிழவு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.