2023ஆம் ஆண்டு ரஷியாவின் பொருளாதார அதிகரிப்பு முந்தைய மதிப்பீட்டை விட அதிகம்
2024-02-13 16:14:54

ரஷிய அரசுத் தலைவரின் இணையத் தளம் 12ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் அன்று காணொளி மூலம் பொருளாதார பிரச்சினை பற்றிய கூட்டத்தை நடத்திய போது கூறுகையில், 2023ஆம் ஆண்டு ரஷியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3.6 விழுக்காடு அதிகரித்தது என்றும், இது முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகம் என்றும் தெரிவித்தார்.

புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டு ரஷியாவின் பொருளாதார அதிகரிப்பு, உலகின் சராசரி நிலையை விட அதிகம் என்று புதின் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 3 விழுக்காடாகும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னதாக மதிப்பிட்டது.

2022ஆம் ஆண்டு ரஷியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2.1 விழுக்காடு குறைந்தது. ரஷியப் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின் மதிப்பீட்டின் படி, 2024ஆம் ஆண்டு அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.3 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.