இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 5.1 விழுக்காடு குறைவு
2024-02-13 17:03:20

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 2023 ஆம் ஆண்டின் டிசம்பரில் 5.69 விழுக்காட்டிலிருந்து 2024 ஆம் ஆண்டின் ஜனவரியில் 5.10 விழுக்காடாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.52 விழுக்காடாக இருந்தது.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் 1,181 கிராமப்புறங்களில் இருந்து சில்லறை விலை விவரங்களை அரசாங்க அதிகாரிகள் வாரந்தோறும் பட்டியலில் சேகரித்தனர்.

நாட்டில் சில்லறை பணவீக்கம் சரிவடைந்ததற்கு உணவுப் பொருட்களின் விலை சரிவே காரணமாக கருதப்படுகிறது. உணவுப் பணவீக்கம், 2023 ஆம் ஆண்டின் டிசம்பரில் இருந்த 9.53 விழுக்காடுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் ஜனவரியில் 8.30 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.