காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்
2024-02-13 17:28:33

பாலஸ்தீனச் செய்தி நிறுவனம் பிப்ரவரி 12ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, காசா பிரதேசத்தின் மத்திய பகுதியிலுள்ள டெய்ர் அல்-பலாஹ், தென் பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய நகரங்களின் மீது இஸ்ரேல் படை அன்று தாக்குதல் தொடுத்தது. இதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

மேலும், காசாவின் ரஃபா நகரம் மற்றும் அதற்கு சுற்றுப்புறப் பிரதேசங்களின் மீது இஸ்ரேல் 12ஆம் நாள் தாக்குதல் தடத்தியது. இதில் 100க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேர் காயமுற்றனர். அதிகமானோர் காசாவின் மத்திய பிரதேசத்துக்குத் தப்பிச்சென்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் துவங்கியது முதல் இதுவரை, காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 28 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்தனர். சுமார் 68 ஆயிரம் பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.