ஜனவரியில் சீன நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு அதிகரிப்பு
2024-02-14 18:59:06

ஜனவரியில் சீனாவின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளரச்சி குறியீடு, கடந்த டிசம்பரில் இருந்ததை விட 0.2 புள்ளிகள் அதிகரித்து, 89.2 ஆகும் என சீன நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனச் சங்கம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவு தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளைப் பொறுத்தவரை, ஜனவரியில் சமூகச் சேவைத்துறை, தங்குமிட மற்றும் உணவகத் துறை ஆகிய இரண்டின் குறியீடுகள் குறைந்ததைத் தவிர, தொழிற்துறை, கட்டிடத் தொழிற்துறை, போக்குவரத்து, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு சேமிப்புத் தொழிற்துறை, வீடு மற்றும் நில உடைமைத்துறை, சில்லறை விற்பனைத் தொழிற்துறை, கணினி மற்றும் மென்பொருள் தொழிற்துறை முதலியவற்றின் வளர்ச்சி குறியீடுகளில் எல்லாம் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

தவிர, கடந்த மாதத்தின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடுகளைப் பார்த்தால், தற்போது இந்த தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.