சிங்கப்பூரில் சர்வதேச எரியாற்றல் பணியகத்தின் புதிய அலுவலகம்
2024-02-14 16:18:20

சர்வதேச எரியாற்றல் பணியகம் சிங்கப்பூரில் பிரதேச ஒத்துழைப்பு மையத்தை அமைக்கும் என்றும், இம்மையம் இவ்வாண்டின் பிற்பாதியில் இயங்கத் துவங்கும் என்றும் இப்பணியகம் பிப்ரவரி 13ஆம் நாள் பாரிஸில் அறிவித்தது. தலைமையகம் அமைந்துள்ள பாரிஸ் நகருக்கு அப்பால் இப்பணியகம் உருவாக்கிய முதலாவது அலுவலகம் இதுவாகும். எரியாற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றத்தை விரைவுபடுத்துவதில் தென் கிழக்காசியா உள்ளிட்ட பிரதேச நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்வதும், இதற்கான நோக்கமாகும்.

தென் கிழக்காசியா, உலகத்தில் மிகப் பெரும் பொருளாதார உயிராற்றல் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகும். உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றத்துக்கு இப்பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச எரியாற்றல் பணியகத்துக்கும், தென் கிழக்காசியாவுக்கும் இடையிலான தொடர்பை, புதிதாக அமைக்கப்பட்ட இந்த அலுவலகம் பெரிதும் வலுப்படுத்தும் என்று இப்பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.