காசாப் பகுதியில் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது
2024-02-14 17:53:25

எகிப்தின் தலைநகர் கைரோவில் 13ஆம் நாள் நடைபெற்ற காசா பகுதியில் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக எகிப்தின் கைரோ செய்தி தொலைகாட்சி நிலையம் செய்தி வெளியிட்டது.

எகிப்து உளவுத் துறைப் பணியகத்தின் தலைவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ.தலைவர், கத்தார் தலைமையமைச்சர், இஸ்ரேலின் மொசாட் தலைவர் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர். காசாப் பகுதியில் போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இதில் விவாதிக்கப்பட்டன.

தவிரவும், எகிப்து அரசுத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசி, 13ஆம் நாள் கைரோவில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.தலைவர் வில்லியம் பர்ன்ஸ், கத்தார் தலைமையமைச்சர் முகமது ஆகியோரை சந்தித்துரையாட்டினார். பல்வேறு தரப்புகள் போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கி, காசாப் பகுதியில் அப்பாவி மக்களைப் பாதுகாக்குமாறு அல்-சிசி வேண்டுகோள் விடுத்தார்.