அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் மீதான கண்டனத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
2024-02-14 16:45:11

அமெரிக்க பிரதிநிதிகள் அவை 13ஆம் நாளிரவு வாக்களிப்பு மூலம் உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் மாயோர்காஸ் மீதான கண்டனத் தீர்மானம் ஏற்றுக்கொண்டது.

பிரதிநிதிகள் அவை அன்று 214-213 என்ற அற்ப பெரும்பான்மை வாக்குகள் மூலம் இத்தீர்மானம் ஏற்றுக்கொண்டது. இவ்விரு கட்சிகளின் சக்திகள் சமமாக இருக்கும் செனெட் அவையிடம் இத்தீர்மானம் சமரிப்பிக்கப்படும் போது, மாயோர்காஸின் பதவி நீக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் நடந்து வருவதுடன், குடியேறுவோர் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையிலான பகைமை மேலும் தீவிரமாகும் என்பதை மாயோர்காஸ் மீதான கண்டனத் தீர்மானம் காட்டுகிறது.

குடியேறுவோர் பிரச்சினை, இவ்வாண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலுக்கான மைய அம்சங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள், 3 லட்சத்து 2 ஆயிரம் குடியேறுவோர் அமெரிக்காவின் தென் பகுதி எல்லையிலிருந்து அந்நாட்டில் நுழைந்து, மாதாந்திர மிக உச்ச நிலையை எட்டியுள்ளது.