ஆர்க்டிக் கவுன்சிலுக்கு ஆண்டு கட்டணத்தை வழங்குவதை நிறுத்திய ரஷியா
2024-02-14 18:52:58

ஆர்க்டிக் கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகள் இக்கவுன்சில் உள்ள பணிகளில் பங்கெடுப்பதை மீட்கும் முன், இக்கவுன்சிலுக்கு ஆண்டு கட்டணம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ரஷியா தீர்மானித்தது என்று ரஷிய செய்தி ஊடகம் 14ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

இக்கவுன்சிலுக்கு ஆண்டு கட்டணம் வழங்குவதை ரஷியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இக்கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பங்கெடுப்பதை மீட்க வேண்டிய பணிகள், கூட்டுத் திட்டப்பணியை நடைமுறைப்படுத்துவதாகும். இது, ஆர்க்டிக் பிரதேசத்தின் பலவீனமான உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது, துருவ ஆய்வு, துருவ கடல் அறிவியல் ஆராய்ச்சி, துருவ மனித பண்பாட்டுப் பரிமாற்றத்தை வளர்ப்பது, ஆர்க்டிக் பிரதேசத்தின் குடிமக்கள் குறிப்பாக ஆதி குடிமக்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்து ஆர்க்டிக் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன் தொடர்புடையது.

ஆர்க்டிக் கவுன்சில் 1996ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் நிறுவப்பட்டது. ஆர்க்டிக் பிரதேசத்தின் சூழலைப் பாதுகாப்பது, பிரதேச பொருளாதாரம், சமூகம் மற்றும் நலன்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை விரைவுபடுத்துவது ஆகியவை இக்கவுன்சிலின் நோக்கமாகும்.