வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகமான மனிதாபிமான உதவி வழங்க வேண்டும்: சீனா
2024-02-14 19:01:31

உலகளாவிய மனிதாபிமான உதவி நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகள் தேவைப்படும் வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான உணவு மற்றும் நிதி உள்ளடங்கும் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் 13ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை, உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஐ.நா.பாதுகாப்பவை நடத்திய உயர் நிலையிலான பொது விவாதக் கூட்டத்தில் அவர் கூறுகையில், தற்போது கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சில ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. மனிதாபிமான உதவியானது, நிர்ப்பந்தத்தை திணிப்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், அரசியல் நிபந்தனைகள் எதுவும் இணைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.