ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் நாடுகளுக்கு இந்திய பிரதமர் சுற்றுப்பயணம்
2024-02-14 15:41:58

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், முதல் இந்து கோவிலின் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரது பயணத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு, "போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா" கோயில் ஒரு நிலையான சாட்சியாகும்  இருக்கும் என்று நரேந்திர மோடி புறப்படுவதற்கு முன் ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டில் அவர் பதவியேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகதிற்கு ஏழாவது மற்றும் கத்தாருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளும் அரசுமுறை பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.