இலங்கையில் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்
2024-02-15 15:45:35

இலங்கையில் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் சுரேன் ராகவன் புதன்கிழமை தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் கட்டுமானத்தில் உள்ளன என்றும், மூன்றாவது பல்கலைக்கழகம் இவ்வாண்டின் மே மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்றும் ராகவன் மேலும் கூறினார்.

இம்மூன்று பல்கலைக்கழகங்களும் முறையே இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.