ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் வாங்யீயின் பயணம் பற்றிய சீனாவின் கருத்து
2024-02-15 16:56:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பிப்ரவரி 16 முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் 60வது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுப்பதோடு, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 15ஆம் நாள் கூறுகையில், மியுனிச் பாதுகாப்புக் கூட்டம், உலகளாவிய செல்வாக்கு வாய்ந்த சர்வதேச நெடுநோக்கு மற்றும் பாதுகாப்புக் கருத்தரங்காகும். இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம், சமத்துவமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தின் உருவாக்கம் ஆகியவை குறித்து, சீனாவின் கருத்துகளை எடுத்துக்கூறவுள்ளார் என்றார்.

மேலும், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடாகவும், சீனாவின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியாகவும் திகழ்கிறது. இப்பயணத்தின் மூலம், இரு நாட்டுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளை மேலும் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் நட்புறவை வலுப்படுத்தி, சீன-ஸ்பெயின் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவுக்கு புதிய உள்ளடகங்களை ஊட்ட சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், இவ்வாண்டு, சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். பிரான்ஸுடன் இணைந்து, நெடுநோக்கு தொடர்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, உலக அமைதி மற்றும் நிதானத்துக்கு ஆக்கமுடன் பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.