சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் பங்கெடுக்க சுமார் 90 தொழில் நிறுவனங்கள் விருப்பம்
2024-02-15 17:17:49

இரண்டாவது சீனச் சர்வதேச வினியோக சங்கிலிப் பொருட்காட்சி இவ்வாண்டின் நவம்பர் 26 முதல் 30ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. தற்போது வரை 90க்கும் அதிகமான சீனா மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கான விருப்ப பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளன என்று சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இக்கவுன்சிலின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், மொரீஷியஸ், எத்தியோப்பியா, எகிப்து ஆகிய நாடுகளில் இப்பொருட்காட்சி தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

2வது பொருட்காட்சியில் தூய்மை எரிசக்தி, நுண்ணறிவு வாகனம், டிஜிட்டல் அறிவியல் தொழில் நுட்பம், ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் பசுமை வேளாண்மை ஆகிய ஐந்து பெரிய சங்கிலிகள் மற்றும் வினியோக சங்கிலி சேவை காட்சி அரங்குகள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.