தென்கொரிய-கியூபா தூதாண்மையுறவு நிறுவப்பட்டது
2024-02-15 16:07:55

தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் 14ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அன்று ஐ.நாவுக்கான இரு நாடுகளின் பிரதிநிதி நிறுவனங்கள் ஆவணங்களைப் பரிமாற்றி, தூதர் நிலை தூதாண்மையுறவு நிறுவுவதை தீர்மானித்துள்ளன.

இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்டது, தென்கொரியா, மத்திய-தெற்கு அமெரிக்க கண்டத்துடனான உறவை வலுப்படுத்தும் முக்கிய திருப்பு முனையாகும். இரு நாட்டு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், கியூபாவில் தென்கொரிய தொழில் நிறுவனங்கள் நுழைவதற்கும் இது துணை புரியும் என்று தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இரு நாடுகள் தூதாண்மையுறவை நிறுவியது, ஐ.நா சட்டதிட்டத்தின் குறிக்கோளுக்கும் கோட்பாட்டுக்கும் சர்வதேச சட்டத்திற்கும், வியன்னா தூதாண்மையுறவு பொது ஒப்பந்தத்திற்கும் பொருந்தும் என்று கியூபா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.