எகிப்து-துருக்கி உறவை மேம்படுத்த இரு நாட்டு அரசுத் தலைவர்கள் விருப்பம்
2024-02-15 18:51:57

எகிப்து அரசுத் தலைவர் அப்தேல் ஃபதாஹ் அல் சிசி 14ஆம் நாள் எகிப்து தலைநகர் கைரோவில் துருக்கி அரசுத் தலைவர் ரேசேப் தாயிப் ஏர்தோகனைச் சந்தித்தார். இரு நாட்டுறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சந்திப்புக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிசி கூறுகையில் தற்போது எகிப்து ஆப்பிரிக்காவில் துருக்கியின் மிக பெரிய வர்த்த்க கூட்டாளியாகும். எகிப்தின் ஏற்றுமதிக்கான முக்கிய இலக்கிடங்களில் துருக்கி ஒன்றாகும் என்றும், இரு நாட்டுறவு சரியான பாதையில் மீண்டும் முன்னேற இரு நாடுகள் உதவி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் ஏர்தோகன் கூறுகையில், எகிப்துடனான உறவை மேம்படுத்த துருக்கி விரும்புகிறது என்றும், இப்பயணத்துக்கு பின் இரு நாட்டுறவு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் எகிப்தில் உள்ள முதலீட்டை துருக்கி அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்தை நனவாக்கி, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் அமைதியை மீட்பது அவசியம் என்றும் அவர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர்.