ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்புக்கான மதிப்பீடு குறைக்கப்பட்டது
2024-02-16 16:48:08

குளிர்காலப் பொருளாதாரத்துக்கான மதிப்பீட்டு அறிக்கையை ஐரோப்பிய ஆணையம் பிப்ரவரி 15ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு விதிகம் 0.6 விழுக்காட்டிலிருந்து 0.5 விழுக்காடாக குறைத்ததோடு, 2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அதிகரிப்பு விதிகம் 1.3 விழுக்காட்டிலிருந்து 0.9 விழுக்காடாக குறைத்து, யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு விதிகம் 1.2 விழுக்காட்டிலிருந்து 0.8 விழுக்காடாக குறைத்துள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு விதிகம் முறையே 1.7 மற்றும் 1.5 விழுக்காடாக இருக்கக்கூடும். பண வீக்க விகிதம் மதிப்பீட்டை விட மேலும் குறையும் என்றும், இவ்வாண்டு ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக விரைவுபடுத்தும் என்றும் இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.