சிங்கப்பூர் விமான கண்காட்சியில் சி919 பங்கேற்பு
2024-02-16 16:49:52

2024ஆம் ஆண்டு சிங்கப்பூர் விமானக் கண்காட்சி வரும் பிப்ரவரி 20 முதல் 25ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள, சீனாவைச் சேர்ந்த சி919 ரக பயணியர் விமானம் ஒன்று 15ஆம் நாள் வியாழக்கிழமை அன்று சிங்கப்பூரை சென்றடைந்தது.

சீனா சொந்தமாக தயாரித்துள்ள பெரிய ரக பயணியர் விமானம் வெளிநாட்டில் பொதுவெளிக்கு வருவது இதுவே முதல்முறையாகும் என்று சீன வணிக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.