60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு துவக்கம்
2024-02-16 18:14:57

60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு பிப்ரவரி 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஜெர்மனியின் முனிச் நகரில் துவங்கியது. அரசு அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட 180க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் அதன் துவக்க நிகழ்ச்சியில் உரைநிகழ்த்தினார்.