மக்களாவில் வசந்த விழா சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
2024-02-17 18:31:26

வசந்த விழாவையொட்டி மக்காவ் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பல்வகை சிறப்பான கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மக்காவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. மக்காவ் தங்கும் விடுதி மற்றும் சுற்றுலாத்துறை வணிகச்சங்கத்தின் தலைவர் சாங்சியென்சூங் கூறுகையில், வசந்த விழாக்காலத்தில் மகெளவில் ஹோட்டலின் பயணியர் தங்கும் விகிதமும், பயணியரின் மனநிறைவும் பெருமளவில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்தார்.

17ஆம் நாள் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, பிப்ரவரி 10 முதல் 16ஆம் நாள் வரை மக்காவுக்குச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்து 32 ஆயிரம் 100ஐ தாண்டியுள்ளது.