அமைதி இல்லாமல் நிலையான வளர்ச்சி இல்லை:78ஆவது ஐ.நா.பேரவைத் தலைவர்
2024-02-17 19:32:25

78ஆவது ஐ.நா.பேரவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அண்மையில் பெய்ஜிங்கில் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், வசந்த விழா அதிகாரப்பூர்வமாக ஐ.நா.வின் விடுமுறை தினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. வசந்த விழா, சீனா உலகிற்கு வழங்கும் அன்பளிப்பு என்று தெரிவித்தார். சீன மக்களுக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், உயர்வேக ரயிலில் கிராமப்புறப் பகுதியில் பயணித்த அனுபவத்தையும்,. சீனப் பயணத்தின் மூலம், சீன மக்களின் கடின உழைப்பை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

தவிரவும், காசாப் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்த அவர், காசாவில் உள்ள பொது மக்களுக்கு மனிதாபிமான உதவி அவசரமாக தேவைப்படுவதாகத் தெரிவித்தார். தற்போது உலகில் மாற்றமும் குழப்பமும் நிறைந்துள்ளன. அமைதி இல்லாமல், நிலையான வளர்ச்சி இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.