வாங்யீ-பிளிங்கென் மியுனிச் சந்திப்பு
2024-02-17 18:30:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 16ஆம் நாள் மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கெனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு நேர்மையாகவும் சாரம்ச ரீதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது.

இருநாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டியின் படி, சன்ஃபிரான்சிஸ்கோவில் எட்ட ஒத்தக்கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது, தற்போது இருதரப்பின் முக்கிய கடமையாகும். இதற்காக, இருநாடுகள், பரஸ்பர மதிப்பளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு நலன் ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். உலகளவில் ஒரே சீனா மட்டுமே உள்ளது. தைவான், சீனாவின் உரிமைப் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும். அமெரிக்கா தைவான் நீரிணையில் நிதானத்தை நிலைநிறுத்த விரும்பினால், ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளையும் பின்பற்றி, தைவான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு வழங்காத மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும் என்று வாங்யீ வலியுறுத்தினார்.

மேலும், இரு தரப்பினரும் மானிட பரிமாற்றம், மனித தொடர்ப்பு வசதிகள் ஆகியவை பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

உக்ரைன் நெருக்கடி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், கொரிய தீபகற்பம் உள்ளிட்ட மைய பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.