ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உயர்மட்டக் கூட்டம்
2024-02-18 15:04:28

ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்பு, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்புக்கான காலநிலை மீதான முதலீட்டு திரட்டல் என்ற தலைப்பில் உயர்மட்ட கூட்டத்தை, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூட்டாக நடத்தின.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில், தொடர்புடைய அனைத்து துறைகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் கென்ய அரசு தலைவர் வில்லியம் சமோய் ருடோ வேண்டுகோள் விடுத்தார்.

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த கூட்டத்தின் போது, வேளாண்மை மற்றும் உணவுத் துறையில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் சாதனைகளை பல பங்கேற்பாளர்கள் பாராட்டினர்.