சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சர் சந்திப்பு
2024-02-18 19:35:22

மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 17ஆம் நாள் ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸைச் சந்தித்துரையாடினார்.

60ஆண்டுகளாக நடைபெற்று வரும் மியுனிச் பாதுகாப்புக் கூட்டம், உலகளவில் செல்வாக்கு மிக்க சர்வதேச பாதுகாப்புக் கொள்கைசார் கருத்தரங்காக மாறியுள்ளதற்கு வாங் யீ முதலில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய அலுவல்களில் ஜெர்மனி மேலும் அதிக பங்காற்றுவதற்கு சீனா ஆதரவு அளிப்பதாகவும், ஜெர்மனியுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, கூட்டாக உலகிற்கு மேலும் நிலைத் தன்மையை வழங்க விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.

ஸ்கோல்ஸ் கூறுகையில், சீனாவுடன் இணைந்து நடப்பாண்டில் இரு நாட்டு உயர் நிலை அதிகாரிகளுக்கிடையேயான பரிமாற்றத்துக்கு தயாராகி, அதிகமான சாதனைகளைப் பெற ஜெர்மனி விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், தற்போதைய கடினமான சர்வதேச நிலைமையில், சீனாவுடன் இணைந்து, அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.