கொந்தளிப்பான உலகில் நிதானமான சக்தியை உறுதியாக இருக்கும் சீனா
2024-02-18 09:53:08

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 17ஆம் நாள் மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு "கொந்தளிப்பான உலகில் நிதானமான சக்தியை உறுதியாக இருப்பது" என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார். தன்னுடைய உரையில் வாங் யீ கூறுகையில், சர்வதேச நிலப்பரப்பில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் பொறுப்புள்ள பெரிய நாடான சீனா அதன் முக்கியக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியையும் நிதானத்தையும் எப்போதும் நிலைநிறுத்தி, கொந்தளிப்பான உலகில் நிலையான சக்தியாக உறுதியாக இருக்கும் என்றார். முதலாவது, பெரிய நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்ற நிதானமான சக்தியாக இருக்க வேண்டும். இரண்டாவது, சூடான பிரச்சினைகளைச் சமாளிக்கும் நிதான சக்தியாக இருக்க வேண்டும். மூன்றாவது, உலகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நிதானமான சக்தியாக இருக்க வேண்டும். நான்காவது, உலக அதிகரிப்பை மேம்படுத்தும் நிதானமான சக்தியாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்,

அதற்குப் பின், உக்ரைன் நெருக்கடி, தைவான், சின்ஜியாங், தென் சீன கடல் முதலிய பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு வாங் யீ பதிலளித்தார்.