இலங்கையில் சுற்றுலா வருவாய் 224 லட்சம் டாலர்
2024-02-18 18:59:16

இலங்கையில் நடப்பாண்டின் முதல் 45 நாள்களில் சுற்றுலா வருவாய் 224 லட்சம் டாலரை எட்டிய புதிய உச்சத்தை அடைந்தது. இக்காலத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 708 பேர் சுற்றுலா மேற்கொண்டனர் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இலங்கைக்கு தினசரி சுமார் 9 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிக அளவில் இலங்கையில் பயணம் மேற்கொள்கின்றனர் என்று அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா சந்தை சுறுசுறுப்படைந்துள்ளதைத் தொடர்ந்து, 2017இல் 25 லட்சம் பயணிகள் என்ற மைல்கல் சாதனையை இவ்வாண்டில் முறியடிக்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.