சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை
2024-02-19 15:26:33

சீன அரசவை உறுப்பினரும் பொதுப் பாதுகாப்பு அமைச்சருமான வாங் சியாவ் ஹோங் பிப்ரவரி 18ஆம் நாள் வியன்னாவில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்ட்ரோ மேயர்காஸுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சான் பிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையிலான போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை முன்னேற்றுவது, இரு நாடுகளிடையே முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முதலியவை குறித்து அவர்கள் வெளிப்படையான, ஆழமான மற்றும் ஆக்கபூர்வமான பரிமாற்றம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய சீன நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். சீனாவை "போதைப் பொருட்களின் தோற்ற நாட்டு பெயர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வாங் சியா ஹோங் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததார்.