ஒரே சீனா கொள்கையையும் அமைதியான ஒன்றிணைப்பையும் ஆதரிக்க வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ
2024-02-19 15:14:28

பிப்ரவரி 17ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, சீனாவின் சிறப்பு அமர்வில் முக்கிய உரையை ஆற்றி, தைவான் பிரச்சினைக்கான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

1943ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை கூட்டாக கெய்ரோ அறிக்கையை வெளியிட்டன. அந்த அறிக்கையில் ஜப்பானால் திருடப்பட்ட தைவான் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஐ.நாவின் ஆவணம் தைவானைச் சீனாவின் ஒரு மாகாணமாக அடையாளப்படுத்துகிறது. இவை, தைவான் பிரச்சினை நிச்சயமாக சீனாவின் உள்விவகாரமாகும் என்பதைக் காட்டுகின்றன. தைவான் எப்போதும் ஒரு தனி நாடாக இருக்காது என்று வாங் யீ தெரிவித்தார்.

தைவானும் பெருநிலப் பகுதியும் நிச்சயமாக மீண்டும் ஒன்றிணைக்கப்படும். இது 140 கோடி சீன மக்களின் உறுதியான விருப்பமும், தவிர்க்க முடியாத வரலாற்றுப் போக்கும் ஆகும் என்றும் தெரிவித்தார்.