கொந்தளிப்பான உலகில் நிலையான ஆற்றல், சீனா
2024-02-19 19:50:18

சீனக்கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 60ஆவது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய நிலைமையை, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். சீனா, தனது அடிப்படைக் கோட்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையை எப்பொழுதும் நிலைநிறுத்தி, கொந்தளிப்பான உலகில் நிதானமான ஆற்றலாக வகிப்பது என்பது, வாங்யீயின் உரையில் மைய உள்ளடக்கமாக இருந்தது என்று மாவ்நிங் அம்மையார் சுட்டிக்காட்டினார்.

ஒத்துழைப்புடன் கூட்டு நலன் என்பதை பல்வேறு நாடுகள் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் அடிப்படைக் கொள்கை வழிகாட்டியாக கொள்ள வேண்டும். சீனா, பல்வேறு தரப்புகளுடன் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, கூட்டு நலன்களுக்கு முயற்சி செய்து, பலதரப்பு தோல்வியைத் தவிர்க்காமல் உலகிற்கு மேலதிக உறுதித்தன்மையை வழங்கி, மனித குலத்துக்கு மேலும் அழகான எதிர்காலத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.