பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு சீனா வாழ்த்துக்கள்
2024-02-19 19:30:10

பாகிஸ்தான் பொது தேர்தல் பொதுவாகத் தடையின்றி நடைபெற்றதற்கு சீனத் தரப்பு வாழ்த்து தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 19ஆம் நாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நெருங்கிய மற்றும் நட்பு உறவில் உள்ள அண்டை நாடாக, சீனா முழுமையாக பாகிஸ்தான் மக்களின் தேர்வுக்கு மதிப்பு அளிக்கின்றது என்றும், பாகிஸ்தானின் பல்வேறு தரப்புகள் பொது தேர்தலுக்குப் பின் அரசியல்சார் ஒற்றுமை மற்றும் சமூக நிதானத்தை கூட்டாகப் பேணிக்காத்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.