மே 10ஆம் நாளுக்கு முன் இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவிலிருந்து வெளியவேறுவர்
2024-02-19 18:13:23

மாலத்தீவு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, இந்தியப் படைவீரர்கள் மாலத்தீவிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு தேதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாலத்தீவு நாட்டு அரசுத் தலைவர் முகமது முயிசு 18ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்வாண்டின் மே 10ஆம் நாளுக்கு முன்னர், மாலதீவு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்ப அழைக்கும். முதல் கட்ட இராணுவ வீரர்கள் மார்ச் 10ஆம் நாளுக்கு முன்னர் வெளியேறுவர் என்றும், மீதமுள்ளவர்கள் மே 10ஆம் நாளுக்கு முன் வெளியேறுவர் என்றும் இந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.