சீன வாகனங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு தவறானது
2024-02-20 19:37:54

கடந்த ஆண்டு சீன வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 49 இலட்சத்து 10 ஆயிரத்தை எட்டியது. உலகளவில் முதல் முறையாக முதலிடம் பிடித்தது. அதே வேளை சுங்க வரியைத் தவிர வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவின் நுண்மதி நுட்ப வாகனங்கள் மற்றும் தொடர்புடைய உதிரிபாகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா கருத்தில் கொண்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் மின்சார வாகனங்களின் மீது சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வைத் துவக்கியது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன வாகனங்களின் ஏற்றுமதி தரவுகளில் சீன தயாரிப்புத் துறையின் உயர் தர வளர்ச்சியும், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் உயிராற்றலும் காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவின் மீது தொடர்புடைய நாடுகள் வர்த்தகப் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, அவர்களின் நீண்டகால வளர்ச்சிக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், உலகத்தின் முன்னேற்றத்துக்கும் செழுமைக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.