சீனா தயாரித்த வணிக விமானங்கள் சி919 மற்றும் ஏ.ஆர்.ஜே21 சிங்கப்பூர் விமான கண்காட்சியில் அறிமுகம்
2024-02-20 10:48:43

பிப்ரவரி 20ஆம் நாள், சிங்கப்பூர் விமான கண்காட்சி சாங்கி கண்காட்சி மையத்தில் தொடங்கியது. இதில் இரண்டு சி919 விமானங்கள் மற்றும் மூன்று ஏ.ஆர்.ஜே21 விமானங்கள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, சீனாவின் வணிக விமான வளர்ச்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு காட்டியுள்ளன.

பெரிய ரக பயணியர் சி919 விமானம் 158 முதல் 192 வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு, 4075 கிலோமீட்டர் முதல் 5555 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். 2023ஆம் ஆண்டின் மே 28ஆம் நாள், சி919 விமானம் தனது முதல் வணிகப் பயணத்தை நிறைவேற்றியது. இதுவரை 4 விமானங்கள் இயங்கப்பட்டு, இதில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன. 

ஏ.ஆர்.ஜே21 பயணியர் விமானம் 78 முதல் 97 வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு, 2225 கிலோமீட்டர் முதல் 3700 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். 2016ஆம் ஆண்டின் ஜூன் வணிக இயக்கத்துக்கு வந்தது முதல், மொத்தம் 127 விமானங்கள் இயங்கப்பட்டு, பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்தைத் தாண்டியுள்ளன.