தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் அதிகரிப்பு – இலங்கை
2024-02-20 18:52:58

இலங்கையில் தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதம் இம்முன்மொழிவை மின்சாரம் மற்றும் எரியாற்றல் துறை அமைச்சர் விஜிசேகரா அமைச்சரவையில் தாக்கல் செய்தார்.

பெரிய-அளவிலான கடல்சார் காற்றாலைகள் மூலம் ஆற்றல் உற்பத்திக்கு இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு-கிழக்குப் பகுதிகள் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடல்சார் காற்றாலை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை உலக வங்கி ஆலோசகர்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.