சீன-இந்திய ராணுவத் தளபதிகளின் 21ஆவது சுற்று பேச்சுவார்த்தை
2024-02-21 19:44:37

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சீன மற்றும் இந்திய ராணுவத் தரப்புகள் பிப்ரவரி 19ஆம் நாளில் சுசூல் மோல்டோ பகுதியில் சீனப் பக்கத்தில் 21ஆவது சுற்று ராணுவத் தளபதிகள் நிலைப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. பரஸ்பர அக்கறை கொண்ட எல்லைப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாகவும் ஆழந்த முறையிலும் ஆலோசித்தன. இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துகளின் கீழ், இராணுவ மற்றும் தூதாண்மை வழிகளின் மூலம் தொடந்து தொடர்பை நிலைநிறுத்தவும், இரு தரப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வு திட்டத்தை வெகுவிரைவில் காணவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

தவிரவும், இரு நாட்டு எல்லைப் பகுதியின் அமைதியைப் பேணிக்காக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.