காசாவில் போர் நிறுத்தத்தை முன்னேற்றுவது மறுக்க முடியாத தார்மீக கடமையும் கட்ட பொறுப்புமாகும்: சீனா
2024-02-21 18:51:49

20ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் கோரும் அல்ஜீரியாவின் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,  வாக்கெடுப்புக்குப் பின்பு உரையாடிய போது, சீனாவின் நிலைப்பாடு பற்றி ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி பன்முகங்களிலும் விளக்கிக் கூறினார். தற்போது, பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் இன்னும் நீடித்து வருகிறது. காசா பகுதியிலுள்ள மனித நேய நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது. பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை முன்னேற்ற, பாதுகாப்பவை கூடிய விரைவில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது மறுக்க முடியாத தார்மீகக் கடமையாகும். கட்டாயமாக ஏற்க வேண்டிய சட்ட பொறுப்புமாகவும், ஐ.நா சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் கோரிக்கையுமாகவும் உள்ளது என்று மௌநிங் தெரிவித்தார்.