சீனக் கடல் படையின் ஏதென் கப்பல் பயணப் பாதுகாப்புப் பணி
2024-02-21 15:10:36

பிப்ரவரி 21ஆம் நாள் முற்பகல், 45ஆவது தொகுதி கப்பல் பயணப் பாதுகாப்பு படைக்குப் பதிலாக, சீனாவின் கடல் படையின் 46ஆவது கப்பல் தொகுதி, குவாங்டொங் மாநிலத்தின் சன்ஜியாங் துறைமுகத்திலிருந்து ஏதென் வளைகுடா மற்றும் சோமாலிய கடல் பரப்புக்குப் புறப்பட்டு சென்றது.

2008ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் சீனக் கடல் படை கப்பல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய பிறகு இது வரை, மொத்தமாக 150 முறை இராணுவக் கப்பல்களை இப்பகுதிக்குச் சீனா அனுப்பி, இப்பகுதியில் கப்பல் பயணப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளது. நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், பொறுப்புமிகு பெரிய நாடான சீனாவின் சர்வதேச தகுநிலையை சீராக வெளிகாட்டப்பட்டுள்ளது.