வங்காளதேச ஏற்றுமதியாளர்கள் வர்த்தக பொருட்காட்சியில் 35 மில்லியன் அமெரிக்க டாலர் ஆர்டர்களைப் பெறுகின்றனர்
2024-02-21 20:08:17

டாக்கா சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில், பன்னாட்டு கொள்முதலாளர்களிடமிருந்து சுமார் 3கோடியே 56இலட்சத்து 20ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொள்வனவு முன்பதிவுகளை ஏற்றுமதியில் ஈடுபடும் வங்காளதேச நிறுவனங்கள் பெற்றுள்ளன.

பொருட்காட்சி நிறைவு விழாவில் இது குறித்து அந்நாட்டு வணிகத் துறை அமைச்சர் அஹாசனுல் இஸ்லாம் டிட்டு கூறுகையில், இது 2023ஆம் ஆண்டை விட 50இலட்சம் அமெரிக்க டாலர் அதிகமாகும் என்றார்.

வங்காளத்தேசத்தின் தயாரிப்புகளை பன்னாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் விதம் இப்பொருட்காட்சி நடைபெற்றது. சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்றன.