தைவானுக்கான ஆயுத விற்பனை:அமெரிக்காவின் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு
2024-02-22 19:44:16

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 22 ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், தைவானுக்கான ஆயுத விற்பனை பற்றிய திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது ஒரே சீனா என்ற கொள்கை மற்றும் சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளின் விதிகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சீனா உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.