அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் காசா போர் நிறுத்தத்திற்கு தடை
2024-02-22 10:38:33

காசா பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. பாகாப்பவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் மறுப்பு அதிகாரத்தை ( 'வீட்டோ' அதிகாரம்) பயன்படுத்தியுள்ளது.

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அரபு நாடுகளின் சார்பில் அல்ஜீரியா முன்வைத்துள்ள இந்த வரைவுத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாகும். இத்தீர்மானம், ஐ.நா பாதுகாப்பவையின் ஒருமித்த கருத்தாகவும் சர்வதேச சமூகத்தின் போர் நிறுத்தத்திற்கான ஒருமித்த கருத்தாகவும் விளங்குகிறது. இதற்கு மாறாக, அமெரிக்கா மீண்டும் மறுப்புரிமையை பயன்படுத்தியது.

இத்தீர்மானம், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் பிணைக் கைதிகளை பற்றிய பேச்சுவார்த்தைக்கு துணை புரியாது என்பது அமெரிக்காவின் காரணமாகும். அமெரிக்காவின் இத்தகைய கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

2023ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நிகழ்ந்த புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கு பிறகு, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 8 சுற்று வாக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. இதில் 2 தீர்மானங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காசா பகுதியில் அப்பாவி மக்களின் உயிரை பொருட்படுத்தாமல், அமெரிக்கா பல முறை மறுப்புரிமையை பயன்படுத்தியது. ஐ.நா பாதுகாப்பவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிக பெரிய தடையாக அமெரிக்கா மாறியுள்ளது.