இலங்கையில் தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கை
2024-02-22 16:24:50

இலங்கையில் தொழுநோயை ஒழிப்பதற்கு உதவும் விதம் உலக சுகாதார மையத்தைச் சேர்ந்த தொழுநோய் நிபுணர்கள் மார்ச் மாதம் இலங்கை வர உள்ளதாக அந்நாட்டு தொழுநோய் எதிர்ப்பு அமைப்பின் இயக்குநர் ரணவீரா புதன்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா முடக்க நடவடிக்கை காரணமாக தொழுநோய் பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு குறிப்படத்தக்க அளவு இந்நோய் அதிகரித்தது, 1,550-க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் ஏற்பட்டது, அவர்களில் 173 பேர் பள்ளி சிறுவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு மாகாணத்தில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொகுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் உதவுவர் என்றும் அவர் கூறினார்.