ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் துவக்கம்
2024-02-22 09:39:29

20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பிப்ரவரி 21ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் துவங்கியது. அன்று பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேரா இக்கூட்டத்தின் துவக்க விழாவுக்குத் தலைமை தாங்கினார். தற்போதைய தீவிர மோதலால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி மற்றும் உலக நிர்வாக சீர்திருத்தம் குறித்து 2 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டம் முக்கியமாக விவாதிக்கும்.

சீனத் துணை வெளியுறவு அமைச்சர் மா சௌஜு, ரஷிய வெளியுறவு அமைச்சர்  லாவ்ரோவ், 20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தூதாண்மை அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தின் மூலம், 20 நாடுகள் குழு மற்றும் ஐ.நாவுக்குமிடையே உள்ள விவாதம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி உலக நிர்வாக சீர்திருத்தத்தைப் பயனுள்ள முறையில் முன்னேற்ற வேண்டுமென பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது.