சூடானில் உணவுப் பற்றாக்குறை தீவிரம்
2024-02-22 15:40:28

சூடான் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்கு நாள்தோறும் ஒரு முறை மட்டுமே போதுமான உணவு கிடைப்பதாக ஐ.நாவின் உலக உணவு திட்ட ஆணையத்தின் சூடான் திட்டப்பணியின் தலைவர் எடி ரோவ் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஐ.நாவின் உணவுப் பாதுகாப்பு தகவலின்படி, தற்போது சூடானில் கிட்டத்தட்ட 1 கோடியே 80 லட்சம் மக்கள் பசியை எதிர்கொண்டுள்ளனர். இது மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காடு. அவர்களில் சுமார் 50 லட்சம் பேர் மேலும் கடுமையான உணவு அவசர நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.