20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு
2024-02-23 10:04:11

20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 22ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள பொது அறிக்கையின்படி, 2 காலகட்டத்திற்குள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொடர்புடைய தரப்புகள் ஒத்த கருத்து எட்டியுள்ளன.

கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் வெளியுறவு அமைச்சர் வியெரா, தற்போதைய கூட்டத்தில் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சர்வதேச அளவிலான முக்கிய மோதல்களில் 20 நாடுகள் குழு கடும் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நனவாக்கும் வகையில், காசா பகுதிக்கான மனித நேய உதவியை வழங்குவதற்கான வழியை உடனடியாக துவங்க 20 நாடு குழுவின் பல்வேறு உறுப்பு நாடுகள் ஆதரவளித்துள்ளன.  இதனிடையே, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கான இறுதியான தீர்வுத் திட்டமாக பாலஸ்தீனம் நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் திங்கள் 20 நாடுகள் குழுவின் தலைமை நாடாக பதவியை ஏற்ற பிறகு பிரேசில் நடத்திய முதலாவது உயர் நிலைக் கூட்டமாகும்.