சீனாவில் ஜனவரியிலான வெளிநாட்டு முதலீட்டுத் தொகை, 11271 கோடி
2024-02-23 20:17:04

சீன வணிகத்துறை அமைச்சகம் பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த ஜனவரி திங்களில் சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 4588 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 74.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. உண்மையில் 11,271 கோடி யுவான் வெளிநாட்டு முதலீட்டுத் தொகை பயன்படுத்தப்பட்டது. இதில், ஜெர்மன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சீனாவிலான முதலீட்டுத் தொகை, முறையே 211.8 விழுக்காடும், 186.1 விழுக்காடும், 77.1 விழுக்காடும் அதிகரித்தது.