சீன கடற்பரப்புக்குள் பிலிப்பைன்ஸ் கப்பல் ஊடுருவியது பற்றிய சீனாவின் எதிர்ப்பு
2024-02-23 15:41:00

பிலிப்பைன்ஸின் மீன் மற்றும் நீர்வாழ் வளப் பணியகத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் சீனத் தரப்பின் அறிவுரை மற்றும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சீனாவின் ஹூவாங் யேன் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்புக்குள் வேண்டுமென்றே ஊடுருவியது. இது குறித்து சீனக் கடல் காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் கன்யூ கூறுகையில், சீனத் தரப்பு பன்முறை விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தினால் சீனா, பிலிப்பைன்ஸின் கப்பலை வெளியேற்ற தேவையான நடவடிக்கையை மேற்கொண்டது. பிலிப்பைன்ஸின் இச்செயல் சீனாவின் இறையாண்மையைக் கடுமையாக மீறியுள்ளது. அதோடு, இச்செயல் சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டைக் கடுமையாக மீறிய ஒன்றாகும். இதுபோன்று இறையாண்மையை மீறும் செயலைப் பிலிப்பைன்ஸ் தரப்பு உடனடியாக நிறுத்த வேண்டுமென நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஹூவாங் யேன் தீவு மற்றும் அதற்கு அருகிலுள்ள கடற்பரப்பு மீது சர்ச்சைக்கு இடமில்லா வகையிலான இறையாண்மை சீனாவுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.