ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் 37ஆவது அமைச்சர் நிலை கூட்டம் நிறைவு
2024-02-23 14:47:44

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் 37ஆவது அமைச்சர் நிலை கூட்டம் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பிப்ரவரி 22ஆம் நாள் நிறைவடைந்தது. சீனா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் 36 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் நிலை பிரதிநிதிக் குழு இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. தானியப் பாதுகாப்புக்கு வேளாண்மை மற்றும் தானிய முறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர்.

நிறைவு விழாவில் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படையான, கணிக்கக்கூடிய, திறந்த மற்றும் நியாயமான சந்தை சார்ந்த உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, பயனுள்ள பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையே அறைகூவல்களைச் சமாளிக்கும் அடிப்படையாகும் என்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.