அமெரிக்க விண்கலம் மீண்டும் நிலவில் தரையிறங்கியது
2024-02-23 19:20:53

அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் 22ஆம் நாள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் விண்கலம் முதன்முறையாக நிலவில் தரையிறங்கியது என்பதுடன், முதன்முறையாக தனியார் நிறுவனத்தால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட சாதனையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் தனியார் நிறுவனம் தயாரித்த இந்த விண்கலம், நாசாவின் பலவித அறிவியல் கருவிகள் மற்றும் வணிக ரீதியிலான பொருட்களைக் கொண்டுள்ளன.

இதனிடையில், ஆர்ட்டெமிஸ் எனும் நிலவு ஆய்வுத் திட்டத்தை அமெரிக்க அரசு 2019ஆம் அறிமுகப்படுத்தியது. 2024ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவில் தரையிறக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், நிதி பிரச்சினை காரணமாக, இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.