பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளின் மீட்டெடுப்புக்குச் சீனா ஆதரவு
2024-02-23 10:24:48

பாலஸ்தீனத்தின் உரிமைப் பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றிய பிரச்சினை குறித்து ஐ.நா சர்வதேச நீதிமன்றம் நடத்திய கேட்டறிதல் கூட்டம் 19 ஆம் நாள் தொடங்கியது. 4 ஆம் நாளான 22 ஆம் நாளன்று இப்பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டைச் சீனப் பிரதிநிதி விளக்கினார்.  அவர் கூறுகையில், பாலஸ்தீன மக்கள் தங்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை மீட்டெடுக்கும் நீதியான லட்சியத்துக்குச் சீனா உறுதியாக ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

பாலஸ்தீன உரிமைப் பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றத் தொடங்கி தற்போது வரை 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. எவ்வளவு காலம் ஆனாலும் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய தன்மை மாறாது, அது போன்றே இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையும் ஒருபோதும் மாறாது. நீதி கிடைக்க தாமதமாகியுள்ளது. ஆனாலும், அது மறுக்கப்பட முடியாது. பாலஸ்தீன பிரச்சினையின் தீர்வுக்குப் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் கூட்டு முயற்சி தேவை என்றும் சீனப் பிரதிநிதி கூறினார்.